
புதுச்சேரியில் பேனர் தடைச்சட்டம் அமலில் உள்ள போதும், அரசியல் கட்சிகள் அதனை மீறுவது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தீரன் சின்னமலை நினைவுதினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் நகர் முழுவதும் பேனர்களைக் குவித்துள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமியை திரைப்பட நடிகர்கள் போன்று சித்தரித்தும், பேனர் வைத்திருக்கிறார்கள்.
சட்டத்தைக் காக்க வேண்டிய மாநில அரசே அதனை மீறி மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பில் ‘மாமன்னன்’ படத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதி!
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு வைக்கப்பட்ட பேனர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.