Homeசெய்திகள்இந்தியாமோட்டார் வாகன இன்சூரன்ஸ் இருக்கா உங்களிடம்?

மோட்டார் வாகன இன்சூரன்ஸ் இருக்கா உங்களிடம்?

-

- Advertisement -

மோட்டார் வாகன இன்சூரன்ஸ் இருக்கா உங்களிடம் ?

மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 146, இந்திய சாலைகளில் ஓடும் மோட்டார் வாகனங்கள் கட்டாயமாக மூன்றாம் தரப்பினர் இழப்பீடு உள்ளடக்கிய காப்பீட்டுக் பாலிசியை வைத்திருக்க வேண்டும்.

சாலைகளில் உங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் கட்டாயமாகும். இது கார்கள், பைக்குகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு பொருந்தும்.

மறுவாக்கு எண்ணிக்கையில் தோல்வியுற்றாலும் மார்தட்டி வரவேற்று ஏற்றுக்கொள்கிறேன் – விஜய பிரபாகரன்!

மூன்றாம் தரப்பினரின் வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டால் வாகனத்தின் ஓட்டுநர் மூன்றாம் தரப்பினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஒருவேளை யாராவது காயமடைந்தால் அல்லது இறந்துவிட்டால், இழப்பீடு வழங்குவதற்கு பெரும் ஆதரவாகவும் இருக்கும்.

சாலையில் வாகனத்தை ஓட்டும் ஒவ்வொரு ஓட்டுநரும் ஒரு செல்லுபடியான உரிமத்தை (valid driving license) கொண்டிருக்க வேண்டும்.

மோட்டார் வாகன இன்சூரன்ஸ் இருக்கா உங்களிடம் ?

செல்லுபடியாகும் மோட்டார் மூன்றாம் தரப்பினர் காப்பீடு (Valid Motor thirty party insurance) இல்லாமல் காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுபவர்கள் அல்லது அனுமதிப்பவர்கள் சட்டத்தை மீறியதற்காக சிறைத்தண்டனை உட்பட தண்டிக்கப்படுவார்கள்.

அத்தகைய குற்றவாளிகள் மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 196 இன் கீழ் தண்டிக்கப்படுவார்கள்:

  1. முதல் முறை மீறுதலுக்கு, அபராதம் ரூ. 2,000 அல்லது இரண்டும்
  2. அதே குற்றத்தை மீண்டும் செய்தால் 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது அபராதமாக ரூ. 4,000 அல்லது இரண்டும் என தண்டிக்கப்படுவார்கள்.

வாகன உரிமையாளர்கள் தங்களுடைய மோட்டார் வாகனங்களின் மூன்றாம் தரப்பினர் காப்பீட்டின் நிலையைச் சரிபார்க்க வேண்டும் ஒருவேளை இல்லையெனில் வாங்க/ புதுப்பிக்க வேண்டும்.

அமைச்சர் பவன் கல்யாணுக்கு முதல் மனைவி வாழ்த்து

செல்லுபடியாகும் மோட்டார் வாகன மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாமல் இயங்கும் வாகனங்கள் மீது அமலாக்க அதிகாரிகளால் மேற்கூறிய அபராத விதிகள் விதிக்கப்படும்.

MUST READ