Homeசெய்திகள்இந்தியாசமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு!

-

 

Gas-Cylinder

புதுச்சேரியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்- ஜெயக்குமார்

புதுச்சேரியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மேலும் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிவப்பு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாயுடன் சேர்த்து, புதுச்சேரி அரசு ரூபாய் 300 மானியத்தை வழங்கும். அதேபோல், மஞ்சள் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாயுடன் சேர்த்து புதுச்சேரி அரசு ரூபாய் 150 மானியத்தை வழங்கும்.

எனவே, வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை சிவப்பு நிற குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 500 ரூபாயும், மஞ்சள் நிற அட்டைத்தாரர்களுக்கு 350 ரூபாயும் குறைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு முதலமைச்சர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபாய் 200-யை குறைத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

MUST READ