Homeசெய்திகள்இந்தியாடிரம்ப் இதயத்தில் ஒளிந்திருக்கும் 'திருடன்':இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்க விரும்பும் அமெரிக்கா..!

டிரம்ப் இதயத்தில் ஒளிந்திருக்கும் ‘திருடன்’:இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்க விரும்பும் அமெரிக்கா..!

-

- Advertisement -

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகியுள்ள டொனால்ட் டிரம்ப், இந்தியா அதிகபட்சமாக அமெரிக்க ஆயுதங்களை வாங்க வேண்டும் என்று விரும்புகிறார். அமெரிக்க ஆயுதங்களை வாங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. திங்களன்று அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை சமநிலைப்படுத்த அழைப்பு விடுத்தார் டிரம்ப். இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் ஏன் இந்தியாவுக்கு அதிக அளவில் ஆயுதங்களை விற்க விரும்புகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கான பதிலை அறிந்து கொள்ள, அமெரிக்க அதிபரின் இதயத்தில் ஒளிந்திருக்கும் திருடனைப் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா, இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் வர்த்தகம் உபரியாக இருக்கும் சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அதாவது, இந்தியா அமெரிக்காவிற்கு அதிக பொருட்களை விற்று குறைவாக இறக்குமதி செய்கிறது. டொனால்ட் டிரம்ப் இதைத்தான் சமநிலைப்படுத்த விரும்புகிறார். இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார்.

கடந்த நிதியாண்டில், இந்தியா, அமெரிக்காவிடமிருந்து வாங்கியதை விட, 35 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்துள்ளது. அதே நேரத்தில், பிடென் ஆட்சியின்போது இருதரப்பு வர்த்தகத்தில் ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டது. அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக மாறி சீனாவை பின்ன்னுக்குத் தள்ளியது. திங்கள்கிழமை இரவு, நரேந்திர மோடி- டொனால்ட் டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தபோது, ​​​​டிரம்ப் இந்த பிரச்சினையை எழுப்பினார்.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை இந்தியா அதிகரிக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே நியாயமான வர்த்தக உறவு இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் இந்திய பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார் எனக் கூறியுள்ளது. டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ராணி முல்லன்,”ட்ரம்பின் பதவிக் காலத்திலும் இருதரப்பு உறவுகள் வலுவாக இருக்கும். ஆனால் பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்தியாவிடம் இருந்து சில எதிர்பார்ப்புகளை அதிபர் டிரம்ப் வைத்திருக்கிறார்” என்கிறார்.

அமெரிக்க
இந்தியாவின் வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கையின்படி, அமெரிக்கா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. சீனாவிற்கு சற்று பின்னால் உள்ளது. இந்தியா ஜனவரி- நவம்பர் 2024 க்கு இடையில் அமெரிக்காவுடன் 35 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்துள்ளது.இது தவிர பிரிக்ஸ் நாடுகளுக்கு வரி விதிக்கப்போவதாகவும் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். டாலருக்கு பதிலாக மாற்று நாணயத்தை உருவாக்க முயற்சித்தால், இந்தியாவையும் உள்ளடக்கிய பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை இரவு ஒரு சமூக ஊடக பதிவில், பிரதமர் நரேந்திர மோடி டொனால்ட் டிரம்பை ‘அன்புள்ள நண்பர்’ என்று அழைத்தார், பின்னர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிரதமர் மோடி பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார் என்றும் கூறினார். பிப்ரவரியில் மோடியின் வருகை நிஜமாகவே நடந்தால், டிரம்ப் 2.0ல் வெள்ளை மாளிகைக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

MUST READ