மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த பாஜக நிர்வாகி 5 கோடி ரூபாய் பணத்ததுடன் போலிசாரிடம் பிடிபட்டுள்ளார்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்டிரா மாநில சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி அனல் பறக்க நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. வாக்குப்பதிவுக்கு தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, தேர்தலையொட்டி பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வசாய் விரார் பகுதியில் பாஜகவினர், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது, பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து தாவ்டேவை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 5 கோடி ரூபாய் ரொக்கபப்பணம் மற்றும் யார் யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்ற பட்டியல் அடங்கிய டைரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த புகாரில் கைதான தாவ்டேவை எதிர்க்கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.