இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று (அக்.26) தமிழகம் வருகிறார்.
“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
சென்னையை அடுத்த உத்தண்டில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, சிறப்புரையாற்றவிருக்கிறார்.
இதற்காக, இன்று (அக்.26) மாலை பெங்களூருவில் இருந்து இந்திய விமானப் படையின் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வரும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. குறிப்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வரவேற்கவுள்ளனர்.
“ஆளுநர் மாளிகை வாசலில் என்ன நடந்தது?”- காவல்துறை விளக்கம்!
இதன் பிறகு கிண்டி ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஓய்வெடுக்கவுள்ளார். நாளை (அக்.27) காலை குடியரசுத் தலைவர் திரௌபதிமுர்முவை முக்கிய தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.