இமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
கடந்த நில மாதங்களாக உலக நாடுகளில் அதிக அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதேபோல் இந்தியாவின் வட மாநிலங்களிலும் அவ்வபோது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் இன்று காலை 6.56 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்ட தொலையில் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த திடீர் நிலநடுக்கத்தால் இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குழுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை.