பிரதமர் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாசிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு துறை செயலாளர், வெளியூர் துறை செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.பிரதமர் தலைமையில் நடைபெறும் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல், தாக்குதலுக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சினை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள், இது போன்று தொடர்ந்து சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுப்பது, அடுத்த கட்டமாக நாடு முழுவதும் பாதுகாப்பை எவ்வாறு தீவிரப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள். ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சென்றுள்ளதால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரில் இருந்து நான்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்