பிரணவ் ஜுவல்லர்ஸுக்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையில் 11.60 கிலோ தங்கம் சிக்கியதாகவும், அதனை பறிமுதல் செய்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
நாக சைதன்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான தண்டேல் பட பர்ஸ்ட் லுக்!
இது தொடர்பாக அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிரணவ் ஜூவல்லர்ஸில் ‘Ponzi’ திட்டத்தின் பேரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, அந்த ஜுவல்லரிஸின் உரிமையாளர் தலைமறைவானதை அடுத்து, பணமோசடி தடுப்புச் சட்டம், 2002- ன் கீழ், பிரணவ் ஜூவல்லர்ஸ் கடைகளில் அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 20- ஆம் தேதி சோதனை நடத்தியது.
மன்சூர் அலிகான் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்!
இந்த சோதனையில், கணக்கில் வராத 11.60 கிலோ தங்கம் மற்றும் கணக்கில் வராத 23.70 லட்சம் ரொக்கம் ஆகியவை சிக்கியது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன், சில ஆவணங்களும் சிக்கியுள்ளது”. இவ்வாறு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.