Homeசெய்திகள்இந்தியா"தேர்தல் பத்திர முறை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!"

“தேர்தல் பத்திர முறை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!”

-

- Advertisement -

 

 

"தேர்தல் பத்திர முறை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!"
தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானவை எனக்கூறி அவற்றை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐந்து புறநகர் ரயில் சேவைகள் ரத்து!

தேர்தல் பத்திரத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் ஒருமித்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

அரசியல் கட்சிகள் அதிகளவில் நிதி பெறுவதற்கான தேர்தல் பத்திரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமித்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதில், “அரசைக் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன.தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசியல் சாசனப் பிரிவு 19 (1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை வழங்காமல் இருப்பதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் என்பது திருப்திகரமாக இல்லை

மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை!

கருப்பு பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களை தவிர வேறு வழிகள் உள்ளன. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானவை” என்று கூறி, அந்த முறையை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

MUST READ