இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!
தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியைத் திடீரென ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
கடந்த 2022- ஆம் ஆண்டு மத்திய அரசின் செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற மறுநாளே, தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்ட போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. 2027- ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையிலும், விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள சூழலிலும் அருண் கோயலின் ராஜினாமா கவனம் பெற்றுள்ளது.
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
ஆனால் அவரது ராஜினாமாவுக்கான காரணங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மூன்று ஆணையர்கள் உள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார்.