டெல்லியில் இன்று (அக்.09) மதியம் 12.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
“இஸ்ரேல் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!
அப்போது அவர் கூறியதாவது, “சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில் மொத்தம் 1.77 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தேர்தல் நடக்கும் மாநிலங்களான தெலங்கானா, மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மிசோரம் மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,276 வாக்குச்சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவு நடக்கும். சத்தீஸ்கர் மாநிலத்தில் 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 24,109 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடக்கும்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் 5.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மத்திய பிரதேசத்தில் 230 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 64,523 வாக்குச்சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவு நடக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் 5.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 51,756 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடக்கும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- மத்திய அரசு கடிதம்!
தெலங்கானா மாநிலத்தில் 3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 35,356 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடக்கும். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 03- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.