Homeசெய்திகள்இந்தியா"தொகுதிப் பங்கீடு பிரச்சனைக்கு தீர்வுக் காணப்படும்"- ராகுல் காந்தி எம்.பி. பேச்சு!

“தொகுதிப் பங்கீடு பிரச்சனைக்கு தீர்வுக் காணப்படும்”- ராகுல் காந்தி எம்.பி. பேச்சு!

-

 

"ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்"- ராகுல் காந்தி பேச்சு!
Photo: ANI

மேற்கு வங்கம் மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

‘நான் உயிருடன் தான் இருக்கிறேன்’…. வீடியோ வெளியிட்ட கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே!

இரண்டாம் கட்டமாக மேற்கு வங்கம் மாநிலத்தில் பாரத் ஜோடா யாத்திரை பயணத்தை மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி,  மம்தா பானர்ஜியோ, காங்கிரஸ் கட்சியோ கூட்டணியில் இருந்து விலகிச் செல்லவில்லை. கூட்டணியிலேயே நீடிப்பதாகவும் விளக்கினார்.

குட் நைட் பட கூட்டணியில் உருவாகும் ‘லவ்வர்’…. ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

தொகுதிப் பங்கீடு தொடர்பாக, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து வருவதாகத் தெரிவித்த ராகுல் காந்தி எம்.பி., இந்த பிரச்சனைக்கு முறையாகத் தீர்வுக் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களால் தேர்வுச் செய்யப்பட்ட அரசைக் கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்ததாகவும், ஆனால் மக்கள் ஒன்றிணைந்து அந்த திட்டத்தை முறியடித்துள்ளனர் என்றும் கூறினார்.

MUST READ