Homeசெய்திகள்இந்தியாதேர்தல் பத்திர வழக்கு தீர்ப்பு: மத்திய அரசின் மறுஆய்வு மனுதள்ளுபடி

தேர்தல் பத்திர வழக்கு தீர்ப்பு: மத்திய அரசின் மறுஆய்வு மனுதள்ளுபடி

-

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. மேலும், தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம்... பா.ஜ.க.வின் கோரமுகம் அம்பலம்

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 4 நீதிபதிகள் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

"தேர்தல் பத்திர முறை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!"

அப்போது, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முகாந்திரம் எதுவும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த முந்தைய தீர்ப்பில் தவறு எதுவும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

MUST READ