தேர்தல் பத்திரம் முறைகேட்டில் பா.ஜ.க. மிகப்பெரிய அளவில் ஈடுபட்டுள்ளதால் அக்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார் – அமைச்சர் அன்பில் மகேஷ்!
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பா.ஜ.க.விற்கு இவ்வளவு பெரிய தொகை தேர்தல் பத்திரமாக கிடைக்கப் பெற்றுள்ளது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே, விசாரணை அமைப்புகளின் வளையத்திற்குள் நிறுவனங்கள் மூலம் பா.ஜ.க.விற்கு அதிகளவில் நன்கொடைகள்.வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டுக் குடிநீர் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.148.54 கோடி நிதி ஒதுக்கீடு!
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த பிறகு குறிப்பிட்ட நிறுவனங்கள் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த விவகாரத்தில் விசாரணை நிறைவுபெறும் வகையில் பா.ஜ.க.வின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.