Homeசெய்திகள்இந்தியாஇந்திய பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க்!

இந்திய பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க்!

-

 

இந்தியா வருகை தரும் எலான் மஸ்க்!

அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்கின் இந்திய வருகை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் எலான் மஸ்கின் வருகை பெரிதாக விளம்பரப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டிருந்த நிலையில், எலான் மஸ்கின் இந்திய வருகை ஒத்திவைப்பு, பா.ஜ.க.வினரை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

ஆவேசம் படக்குழுவினரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், இந்தியாவில் தனது மின்சார தொழிற்சாலையை அமைக்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது தொடர்பாக எலான் மஸ்க், நாளை (ஏப்ரல் 21) இந்தியா வருவதற்கும், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்தியா புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக தனது பயணத்தை எலான் மஸ்க் ஒத்திவைத்துள்ளார். இது குறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளதாவது, “டெஸ்லா நிறுவனத்தின் சில பணிகள் காரணமாக, தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளேன். நடப்பாண்டின் பிற்பகுதியில் இந்திய பயணம் மேற்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காத சிம்பு…. காரணம் இதுதானா?

தேர்தல் நேரத்தில் மஸ்க் வருகையை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பயணத்தை போல, எலான் மஸ்கின் பயணத்தை விளம்பரப்படுத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டிருந்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது எலான் மஸ்கின் வருகை ஒத்திவைப்பு. ஜூன் 04- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்பதை கருதியே எலான் மஸ்க் தனது வருகையை ஒத்திவைத்துள்ளதாக தகவல் கூறுகின்றனர்.

MUST READ