மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
“ஆடியோ லாஞ்ச் ரத்து ஏன்?, படத்தில் ஆபாச வசனம் இடம் பெறாது”- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி, 46% ஆக உயர்ந்துள்ளது.
பள்ளி சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்த அகவிலைப்படி உயர்வானது ஜூலை 01- ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 48.67 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.