கைது செய்யப்படுவதில் இருந்து தனக்கு பாதுகாப்பு அளித்தால் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
டெல்லி புதிய மதுபான கலால் கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராக ஒன்பதாவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மனை எதிர்த்து டெல்லி முதலமைச்சர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரவிந்த் கெஜ்ரிவால் ஏன்? அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் தாம் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தால் அமலாக்கத்துறையினரிடம் ஆஜராகவில்லை எனவும், நீதிமன்றம் தமக்கு உரிய பாதுகாப்பை அளித்தால், நிச்சயம் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக தயாராக இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை சம்மன் அனுப்பினாலே கைது செய்யப்படுவார்களா எனக் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை இதே பாணியில் அமலாக்கத்துறை கைது செய்திருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
முதலமைச்சரின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியீடு!
அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு விளக்கம் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 22- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.