Homeசெய்திகள்இந்தியாஅனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்

-

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்

கர்நாடகாவில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருந்தார். ஆனால் அதில் சில கண்டிஷன்களை காங்கிரஸ் தற்போது அறிவித்துள்ளது.

ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண் க்ருஹ லட்சுமி திட்டத்திற்கு தகுதி பெறுவார்.  ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பதிவு செய்யலாம். இந்தத் திட்டம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 2023 அன்று வெளியிடப்படும்.

முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு....கர்நாடக மக்கள் மகிழ்ச்சி!
Photo: ANI

ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண் க்ருஹ லட்சுமி திட்டத்திற்கு தகுதி பெறுவார்.  ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பதிவு செய்யலாம். இந்தத் திட்டம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 2023 அன்று வெளியிடப்படும்.

குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வருமான வரி செலுத்துவோர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்யும் பெண்கள் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படாது. ரேஷன் அட்டையில் குடும்ப தலைவியாக குறிப்பிடப்பட்டுள்ள பெண்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. தவறான தகவல்களை வழங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவில் எச்சரித்துள்ளது.

Image

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2000 ரூபாய் வழங்குவதாக தேர்தலில் சொல்லிவிட்டு, தற்போதை அதை மாற்றி அறிவித்திருக்கும் கர்நாடக அரசுக்கு பாஜகவை சேர்ந்த பெங்களூரு தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

MUST READ