ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.
“சரித்திரத்தில் நடக்காத சம்பவம்”- அண்ணாமலை பேட்டி!
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “பா.ஜ.க.வினர் அளிப்பது வெற்று வாக்குறுதிகள்; அவை நடைமுறைக்கு வராது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் போது,ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய, முதலமைச்சர் அசோக் கெலாட், “ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 1.5 கோடி குடும்பத்தினருக்கு எரிவாயு உருளை ரூபாய் 500- க்கு வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.
பெட்ரோல் குண்டுவீச்சு- ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார்!
இந்த பொதுக்கூட்டத்தில், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.