கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல நக்சல் தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹெப்ரி நகர் அருகே உள்ள கபினாலே என்ற கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் ஐந்து நக்சல் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கர்நாடக நக்சல் எதிர்ப்பு படையினருக்கு தகவல் கிடைத்தள்ளது.
அதனை அடுத்து அங்கு சென்ற படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களை எதிர்த்து நக்சல் எதிர்ப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் அதில் அந்த கும்பலின் தலைவன் விக்ரம் கவுடாவை சுட்டுக் கொல்லபட்டார். இந்த சம்பவம் உடுப்பி மாவட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த என்கவுன்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
உளவுத்துறை நக்சல் எதிர்ப்பு படையினருக்கு கொடுத்த தகவலின்படி கபினாலே கிராமத்தை சேர்ந்த விக்ரம் கவுடா கர்நாடக மாநிலத்தில் நக்சல் இயக்கத்தின் நேத்ராவதி பிரிவின் தளபதியாக இருந்துள்ளார். அவரது படைப்பிரிவினர்களோடு தனது கிராமத்திற்கு சென்று அவர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்க சில நாட்களாக முயற்சி செய்து வந்துள்ளனர்.
அந்தத் தகவலை சேகரித்த உளவுத்துறை உடனடியாக நக்சல் எதிர்ப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த போது இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் விக்ரம் மட்டும் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள நான்கு பேர் வனப்பகுதிக்குள் தப்பி சென்று விட்டனர் அவர்களை தொடர்ந்து தேடிப் பிடிக்கும் பணியில் நக்சல் எதிர்ப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கறிஞர் காமராஜ் வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை – மதுரை நீதிமன்றம் தீர்ப்பு