Homeசெய்திகள்இந்தியாதக்காளியால் கோடீஸ்வரரான விவசாயி!ரூ.4 கோடி வருமானம்…

தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயி!ரூ.4 கோடி வருமானம்…

-

தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைப்பது என பெண்கள் யோசிக்கும் அளவுக்கு தக்களியின் விலை உயர்ந்துள்ளது.தக்காளியின் மூலமே விவசாயி ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருபவர் விவசாயியான முரளி.இவர் கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலத்தில் கடந்த 8 ஆண்டுகளாக தக்காளி பயிரிட்டு வருகின்றனர்.தக்காளியின் விலை தற்போது உயர்ந்துள்ளதால் நல்ல வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

சுமார் 4 அடி உயரமுள்ள செடியிலிருந்து இது வரை 35 முறை அறுவடை செய்துள்ளதாகவும் கடந்த 45 நாட்களில் மட்டும் ஒரு ஏக்கருக்கு 8ஆயிரம் கிலோவுக்கு மேல் தக்காளி  அறுவடை செய்து கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியதாகவும் மகிழ்ச்சியடைந்தார்.

கோலார் வேளாண் சந்தையில் தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தது.சுமார் 130 கி.மீ தூரம் சென்று விற்பனைசெய்வதாகவும் கூறினார்.இந்த செடியில் இன்னும் 15 முதல் 20 முறை வரை தக்காளி அறுவடை செய்யலாம் எனவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

கடந்தாண்டு ஜீலை மாதத்தில் தக்காளியின் விலை வீழ்ச்சியால் சுமார் ஒன்றரை கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார்.அதைத் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையாலும்,போதிய மின்சாரம் இல்லாமலும் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்துள்ளார் முரளி.எனினும் மனம் தளராது தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்ட அவருக்கு இது ஒரு பொற்காலமாகவே இருக்கிறது. முயற்சி செய்தால் எதிலும் வெற்றி பெறலாம் என அவர் கூறினார்.

தன்னுடைய கடன்களை அடைத்தும்,தனது மகன் பொறியியல் படிப்புக்கும், மகளின் மருத்துவ படிப்பிற்கென செலவிட்ட பிறகும் தனது கையில் ரூ.2 கோடி உள்ளதாகவும் தெரிவித்தார்.

நம்பிக்கையோடு உழைத்தால் என்றாவது ஒருநாள் உச்சத்தை அடைவோம் என்பது முரளியின் வாழ்க்கையில் உண்மையானது.

 

MUST READ