ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (ஜூலை 27) நடந்த அரசு விழாவில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, புதிதாகக் கட்டப்பட்டுள்ள நான்கு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து ஏழு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
புகாரை கண்டுகொள்ளாத அதிகாரிகளின் இருக்கையில் பாம்பை விட்ட இளைஞர்
புதிய கல்லூரிகள் திறப்பால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. 12 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவுவதன் மூலம் மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 6,275 ஆக உயரும்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “விவசாயிகளுடன் மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது. சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகளைப் புரிந்துக் கொள்ளும் அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. ஒன்பது ஆண்டுகளாக விவசாயிகள் நலன் கருதி அரசு பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது” என்றார்.
“அரசு சேவைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்”- அதிரடியாக அறிவித்த மாநில அரசு!
விழாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில அமைச்சர்கள், பா.ஜ.க.வின் மாநில தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.