ஃபெங்கால் புயல் சென்னை மற்றும் புதுச்சேரியை நெருங்கி வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தேவையற்ற பீதியை தவிர்க்கும் படி அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு மிக அருகில் 140 கிலோமீட்டர் தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. 12 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து சென்னை மற்றும் புதுவையை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.
அதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ரெட் அலார்ட் விடுப்பட்டுள்ளது.
சென்னை பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு (காலை 8.40 மணி முதல்) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது பெய்து வருகிறது.
மின்சாரம் தொடர்பான சாதனங்களில் கவனத்துடன் கையாள வேண்டும்.
மேலும் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், உங்கள் சாதனங்களை சார்ஜ் செய்யவும், தண்ணீர் தொட்டிகளை நிரப்பவும், தேவையின்றி வருந்துவதை விட எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.