இந்தியாவில் எதிர் வரும் பண்டிகைக் காலத்தில் கார்களின் விற்பனை 10 லட்சத்தைக் கடக்கும் என மாருதி சுசுகி நிறுவனம் கணித்துள்ளது.
“ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
வரும் ஆகஸ்ட் 17- ஆம் தேதி முதல் நவம்பர் 14- ஆம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளன. இந்த 68 நாள் காலக்கட்டத்தில் ஒட்டுமொத்தமாக 10 லட்சம் கார்கள் விற்பனையாகும் என எதிர்பார்ப்பதாக, மாருதி சுசுகி நிறுவனத்தின் முதுநிலை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
ஓராண்டில் விற்பனைச் செய்யப்படும் கார்களில், பண்டிகைக் காலங்களில் மட்டும் 22% முதல் 26% விற்பனையாவது வழக்கம் என்றும் அவர் தெரிவித்தார். இந்தாண்டில் 40 லட்சம் கார்கள் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதில் 10 லட்சம் கார்கள் பண்டிகை காலத்தில் மட்டும் விற்பனையாகும் என்றும் மாருதி சுசுகி நிறுவனத்தின் முதுநிலைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.