பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நீடிக்கும் சண்டை
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையால் 5 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர்.
ரஜோரியின் கேஸ்ரி மலைப்பகுதியில் உள்ள குகையில் தீவிரவாதிகள் பதுக்கி இருப்பதாக தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர்.
வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்ததும் உஷாரான பயங்கரவாதிகள் வெளிபொருட்களை வெடிக்க செய்து தப்பி சென்றனர். இந்த சண்டையில் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதரைத் தொடர்ந்து ரஜோரி மாவட்டத்தின் கந்திவனப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டரில் கூடுதல் வீரர்கள் தரையிறக்கப்பட்டு சண்டை நீடித்து வருகிறது.
ரஜோரி அல்லாமல் பாராமுல்லா மாவட்டத்தில் கர்ஹாம குன்ஜர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலைத் தொடர்ந்து காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அங்கு இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.