Homeசெய்திகள்இந்தியாகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார் நிதியமைச்சர்- ப.சிதம்பரம் கிண்டல்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார் நிதியமைச்சர்- ப.சிதம்பரம் கிண்டல்

-

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார் நிதியமைச்சர்- ப.சிதம்பரம் கிண்டல்

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கை இன்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30ல் சொல்லப்பட்டுள்ள வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை (ELI) திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய நிதிநிலை அறிக்கை – தங்கம் விலையில் அதிரடி மாற்றம்

காங்கிரஸ் அறிக்கையின் பக்கம் 11-ல் குறிப்பிடப்பட்டுள்ள உதவித்தொகையுடன் கூடிய இன்டன்ஷிப் பயிற்சி திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸின் பல ஆண்டுகால கோரிக்கையான ‘ஏஞ்சல் வரி’ ரத்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பக்கம் 31ல் சொல்லப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையும் தற்போது பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசு ஏஞ்சல் வரியை ரத்து செய்தது மகிழ்ச்சியை தருகிறது. இதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வேறு சில யோசனைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நகலெடுத்திருக்கலாம். விரைவில் அதனை பட்டியலிடுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ