உத்தராகண்டில் உள்ள ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் புலி தாக்கியதில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அங்குள்ள டிக்காலா என்ற பகுதியில் வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்று சுற்றிக் காட்டும் பணியில் ராம்பிரசாத் (வயது 55) என்ற வன ஊழியர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மண் நியமிக்கப்பட வாய்ப்பு!
வாகன சவாரியை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் அங்கிருந்த ஆண் புலி ஒன்று, அந்த ஊழியரை பாய்ந்து தாக்கியது. பின்னர் அந்த ஊழியரை அடித்துக் கொன்று இழுத்துச் சென்றதாக, அதைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு சரணாலயத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
“2024 ஐ.பி.எல். தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்”- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு!
இதற்கிடையே, உயிரிழந்த ஊழியரின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் இந்த ஒரே மாதத்தில் புலி தாக்கியதில் இரண்டாவது நபர் உயிரிழந்தார்.