Homeசெய்திகள்இந்தியாகர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்

-

கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பெங்களூரு நகரில் உள்ள சதாசிவ நகர் பகுதியில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார். 92 வயதான இவர் கடந்த சில நாட்களாக வயதோதியம் காரணமாக உடல் நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்தார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் பத்தாவது முதலமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்தார். 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தார். 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை மன்மோகன் சிங் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக செயல் புரிந்தார். இவர்

இவர் வயதின் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு முதல் பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார். அடுத்த வருடம் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க இந்தியருக்கு மாபெரும் பதவி: புகழ்ந்து தள்ளிய டிரம்ப்..!

கர்நாடகத்தின் முதல்வராக 1999 முதல் 2004 வரை எஸ்.எம். கிருஷ்ணா பதவி வகித்துள்ளார். பின்னர் மத்திய அமைச்சராகவும், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

கர்நாடக சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது, அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் எஸ்.எம். கிருஷ்ணா. காவிரி பிரச்னையில் தமிழக அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு 2023ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கபட்டது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ