Homeசெய்திகள்இந்தியாகன்னடர்கள் மீது எழுதிய மரண சாசனம்- முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்!

கன்னடர்கள் மீது எழுதிய மரண சாசனம்- முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்!

-

 

கன்னடர்கள் மீது எழுதிய மரண சாசனம்- முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்!
File Photo

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவு கன்னடர்கள் மீது எழுதிய மரண சாசனம் என கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

“காவிரி பிரச்சனை- வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை”- காவல்துறை டி.ஜி.பி. எச்சரிக்கை!

இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவு கன்னடர்கள் மீது எழுதப்பட்ட மரண சாசனம்.

கர்நாடகம் குடிநீருக்கு தண்ணீர் கேட்கிறது; ஆனால் தமிழகமோ பயிர் சாகுபடிக்கு நீர் கேட்கிறது. தமிழகத்தில் சுயநலம் உள்ளது; கர்நாடகா மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது. மனிதநேயத்திற்கு எதிராக இருக்கும் தமிழகத்தின் எண்ணத்தை ஒப்புக்கொள்ள முடியாது. தமிழகத்திற்கு எதிராக போராடும் எண்ணம் கர்நாடகா அரசுக்கு இல்லை.

காவிரி விவகாரம்: போராட்டத்தை அறிவித்த நாம் தமிழர் கட்சி!

கூட்டாட்சி நடைமுறையில் அனைவரும் சமமானவர்கள்; இடர்காலத்தில் நீரை பங்கீட்டு கொள்வது குறித்து உச்சநீதிமன்றம் கூறவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு இடர்பாட்டு சூத்திரத்தை உடனே வகுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்கக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ