Homeசெய்திகள்இந்தியாமறைந்த முன்னாள் பிரதமர்களுக்கும், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் 'பாரத ரத்னா' விருது அறிவிப்பு!

மறைந்த முன்னாள் பிரதமர்களுக்கும், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு!

-

 

மறைந்த முன்னாள் பிரதமர்களுக்கும், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் 'பாரத ரத்னா' விருது அறிவிப்பு!

மறைந்த முன்னாள் பிரதமர்கள் மற்றும் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

எலிக் காய்ச்சல் பாதிப்பு….10- க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மறைந்த முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்ம ராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பசுமைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இந்திய விவசாயத்தை நவீன மயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் மகத்தான பங்களிப்பை அளித்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். சவாலான நேரத்தில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவியதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் தொலைநோக்கு பார்வை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர்களுக்கும், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் 'பாரத ரத்னா' விருது அறிவிப்பு!

பஞ்சு மிட்டாயில் நஞ்சு……மக்களே உஷார்!

அதேபோல், விவசாயிகளின் உரிமைகள், நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முன்னாள் பிரதமர் சரண் சிங் என்று பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

MUST READ