தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டத் தலைவர்கள் மரியாதைச் செலுத்தினர்.
குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று (அக்.02) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பலரும் காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.
“ஜம்மு- காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநர்?”- குலாம் நபி ஆசாத் மறுப்பு!
காந்தியின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம்; காந்தியின் எண்ணங்கள் நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கட்டும். மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.