Homeசெய்திகள்இந்தியாஉத்தரபிரதேசத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து... 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து… 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி

-

- Advertisement -

உத்தரபிரதேச மாநிலத்தில் குடியிருப்பில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சிகந்தராபாத் ஆஷாபுரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு 9 அணி அளவில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் குடியிருப்பின் ஒரு இடிந்து தரைமட்டமானது. இதில் அந்த குடியிருப்பில் இருந்த 19 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசா ர், தீயணைப்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் பத்திரமாக மீட்டனர். மேலும் 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ