Homeசெய்திகள்இந்தியாகேஸ் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!

-

 

Gas-Cylinder
நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு இன்று (ஆகஸ்ட் 30) முதல் அமலுக்கு வந்துள்ளது.

நிலவின் பள்ளத்தை உணர்ந்துப் பாதையை மாற்றிய ‘பிரக்யான் ரோவர்’!

சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் ரூபாய் 200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததால் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலைக் குறைப்பால் 31 கோடி பயனாளர்கள் பயனடைவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 200 குறைந்து ரூபாய் 918.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் ரூபாய் 1,118.50- க்கு விற்பனை செய்த நிலையில், இன்று ரூபாய் 918.50 விற்பனை செய்யப்படுகிறது.

நிலவின் தென்துருவப் பகுதியில் ஆக்சிஜன்- கண்டறிந்த ‘பிரக்யான் ரோவர்’!

அதேபோல், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்புப் பெற்றவர்களுக்கும் கூடுதலாக ரூபாய் 200 மானியம் வழங்கப்படும் அறிவிப்பும் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

MUST READ