Homeசெய்திகள்இந்தியாசமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாகக் குறைப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாகக் குறைப்பு!

-

 

Gas-Cylinder

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 29) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஜி20 மாநாடு, பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவைக் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனக்கு நல்ல வருமானம் வருகிறது……யாரும் பணம் அனுப்பாதீங்க…. மக்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்டத்தில் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 200 குறையும்.

அதேபோல், அனைத்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ரக்ஷா பந்தனையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு பெண்களுக்கு அளித்த பரிசு.

சிலிண்டர் விலை குறைப்பு மூலம் சுமார் 75 லட்சம் சந்திரயான்- 3 திட்டம் வெறும் வெற்றி அல்ல; தேசத்தின் முன்னேற்றத்திற்கான அடையாளம். சந்திரயான்- 3 திட்டத்தின் வெற்றிக்காக பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. சந்திரயான்- 3 திட்ட வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நிலவில் சந்திரயான் கால் பதித்த ஆகஸ்ட் 23- ஆம் தேதியை இனி தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாட முடிவுச் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ