திவாலான ‘Go First’ நிறுவனத்தை வாங்க ஸ்பைஸ்ஜெட் (Spicejet) மற்றும் ஸ்கை ஒன் (Sky One) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஏலத்தொகைக் குறித்து புள்ளி விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.
சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திவாலில் சிக்கியுள்ள ‘Go First’ ஏர்லைன்ஸ் நிறுவனம், கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக விமான சேவை வழங்குவதை நிறுத்தியதுடன், திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த சூழலில், ‘Go First’ விமான நிறுவனத்தை வாங்கும் ஏலத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் ஷார்ஜாவைச் சேர்ந்த ஸ்கை ஒன் (Sky One) நிறுவனம் இணைந்து ஏலப் புள்ளிகளை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த புதிய விமான சேவையின் செயல்பாட்டு பங்குதாரராக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பால் இரு நிறுவனங்களின் பலத்தையும் ஒன்றிணைத்து சிறந்த செலவு மேலாண்மை, வருவாய் அதிகரிப்பை உருவாக்கி இந்திய விமான சேவைத்துறையில் வலுவான நிலையை ஏற்படுத்துவதைக் கொண்டுள்ளதாக அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக அரசு – ஈபிஎஸ் கண்டனம்
முன்னதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.