ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அரசுப்பேரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று பெங்களுரு நோக்கி சென்று கொண்டிருந்தது. பலமனேரி அருகே மோக்லிகாட் என்ற இடத்தில் சென்றபோது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. பின்னர் தறிகெட்டு ஒடிய பேருந்து பின்னால் வந்த மற்றொரு லாரியுடன் மோதியது.
இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் பெங்களுருவை சேர்ந்த 8 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பலமனேரி காவல்துறையினர் மற்றும் மீட்புபடையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பலமனேரி, பெங்களுரு மற்றும் வேலுர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுபபி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகினறனர். பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.