பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் ‘நடிகர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசுக்கும், பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்தது. இந்த சூழலில், ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், தனிப்பட்டக் காரணங்களுக்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
‘நான் உயிருடன் தான் இருக்கிறேன்’…. வீடியோ வெளியிட்ட கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே!
பஞ்சாப் மாநில ஆளுநரின் பதவி ராஜினாமா, அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.