குடியரசுத் தலைவர் தலைமையில் அனைத்து மாநில ஆளுநர் மற்றும் யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநர்கள் மாநாடு நடைபெற்றது – குடியரசுத் துணைத் தலைவர் ,பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு.
தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து ஆளுநர்கள் மாநாடு நடைபெற்றது. நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆளுநர்கள் அவர்களது மனைவி உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்தளித்தார்.
இதனை தொடர்ந்து இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அனைத்து மாநிலங்களிலும் தரமான கல்வி வழங்குதல், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாடு, இளைஞர் நலன் மேம்பாடு, காலநிலை மாற்றம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குடியரசு தலைவர் முர்மு ஆளுநர்கள் மாநாட்டில் பேசியுள்ளார். ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ரவி பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.