உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டது பதற வைத்தது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து இருவரும் விரிவாக விவாதித்ததாகவும், ஆளுநருக்கு சில அறிவுறுத்தல்களை அமித்ஷா வழங்கியதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
சந்திப்பு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கப்பூர்வ சந்திப்பை நடத்தினேன்.
நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.