Homeசெய்திகள்இந்தியாதிருச்சூரில் தங்க நகை வியாபாரம் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி சோதனை - 104 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சூரில் தங்க நகை வியாபாரம் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி சோதனை – 104 கிலோ தங்கம் பறிமுதல்

-

திருச்சூரில் தங்க நகை வியாபாரம் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி சோதனை - 104 கிலோ தங்கம் பறிமுதல்ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனையில் 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தங்க நகை உற்பத்தி பிரிவுகள், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனைகள்  அக்டோபர் 23, 2024 (புதன்கிழமை) தொடங்கி அக்டோபர் 24, 2024  (வியாழக்கிழமை) காலை முடிவடைந்துள்ளது.

திருச்சூரில் தங்க நகை வியாபாரம் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி சோதனை - 104 கிலோ தங்கம் பறிமுதல்

கடந்த ஏழு மாதமாக ஜிஎஸ்டி துறையில் உள்ள உளவு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளுக்கு பிறகு மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த 700 அதிகாரிகள் பங்கெடுத்து 78 நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது

இந்த சோதனையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்க நகைகள் வியாபாரம் செய்யும் வியாபார நிறுவனங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் மூன்று கோடியே 40 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது

தற்போது பிடிபட்டுள்ள 104 கிலோ தங்க நகைகள் எந்த ஆவணங்களும் இன்றி வைத்திருந்தை கண்டறிந்து பிடிக்கப்பட்டுள்ளதாக சோதனையில் ஈடுபட்ட ஜிஎஸ்டி உளவுத்துறை துணை கமிஷனர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

 

திருச்சூரில் தங்க நகை வியாபாரம் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி சோதனை - 104 கிலோ தங்கம் பறிமுதல்

 

தற்போது பிடிபட்டுள்ள தங்க நகைகள் குறித்து விரிவான விசாரணையை துறை அதிகாரிகள் நடத்துவார்கள் என்றும் தற்போது பிடிக்கப்பட்டுள்ள தங்க நகைகள் முழுவதும் கருவூலத்திற்கு கொண்டு சென்று பாதுகாக்கப்படும் அதன் பிறகு நகை உரிமையாளர்களுக்கு உரிய ஆவணங்கள் கோரி நோட்டீஸ் வழங்கப்படும் எனவும் சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் ஆவணங்களை காட்டலாம் , இதை பரிசோதித்துப் பார்த்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தங்கத்திற்கு மூன்று சதவீதம் ஜிஎஸ்டி வரி மதிப்பு உள்ளதாகவும் இதை ஏமாற்றி வாங்குவது விற்பது தொடர்பாக விசாரணையில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை நடத்தப்படும் விவரம் கசிந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் இதில் சோதனையில் பங்கெடுக்கும் 700 அதிகாரிகளுக்கு சோதனை நடத்தப்படும் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும் இவர்கள் அனைவரும் பேருந்துகள் மூலம் சுற்றுலா அழைத்து செல்வது போல அதிகாரிகளை அழைத்து வந்து ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி திடீர் சோதனையில் ஈடுபட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்துக்காக குழந்தைகள் கடத்தல் – போலீஸ் பிடியில் குற்றவாளிகள்

ஜி எஸ் டி உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த திடீர் சோதனை காரணமாக தங்க நகைகள் செய்யும் பட்டறைகள் மொத்த வியாபாரம் மையங்களில் பெரும் பரபரப்பு நிலவி உள்ளது.

 

MUST READ