Homeசெய்திகள்இந்தியாபுதிய உச்சத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல்!

புதிய உச்சத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல்!

-

 

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஏப்ரல் மாதத்தில் ரூபாய் 2.10 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியுள்ளது. கடந்த 2023- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட நடப்பாண்டில் ஏப்ரல் மாதத்தில் 12.4% ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்நாட்டு வர்த்தகம் அதிகரிப்பே ஜி.எஸ்.டி. வசூல் அதிகரிக்க காரணமாகக் கூறப்படுகிறது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு!

குறிப்பாக, தமிழகத்தில் ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூபாய் 12,210 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2023- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது ஜி.எஸ்.டி. வசூல் 6% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரூபாய் 37,671 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியுள்ளது.

கோடை வெயில் தாக்கம் – ஆவின் மோர் விற்பனை அதிகரிப்பு !

கர்நாடகாவில் ரூபாய் 15,978 கோடியும், உத்தரப்பிரதேசத்தில் ரூபாய் 12,290 கோடியும், ஹரியானாவில் 12,168 கோடியும் ஜி.எஸ்.டி. வரி வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ