மத்திய அமைச்சர் பயணித்த இண்டிகோ விமானத்தில் (Indigo Airlines) ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக, கவுகாத்தியில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 6E2652 என்ற விமானம் நேற்று (ஜூன் 04) காலை 08.40 மணிக்கு அசாம் மாநிலம், கவுகாத்தியில் இருந்து திப்ரூகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ராமேஸ்வர் டெலி, பா.ஜ.க.வைச் சேர்ந்த திப்துகர் தொகுதி எம்.எல்.ஏ. பிரசாந்த புகான் மற்றும் துலியாஜன் தொகுதி எம்.எல்.ஏ. தெராஸ் கோவல்லா ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.
ஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!
அப்போது, நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அந்த விமானம் மீண்டும் கவுகாத்தி சர்வதேச நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கவிடப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் விமான இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்த நிலையில், விமானம் மீண்டும் பயணிகளுடன் திப்ரூகருக்கு சென்றடைந்தது.