Homeசெய்திகள்இந்தியாதெலுங்கானாவில் ஆலங்கட்டி மழை - மக்கள் மகிழ்ச்சி

தெலுங்கானாவில் ஆலங்கட்டி மழை – மக்கள் மகிழ்ச்சி

-

- Advertisement -
தெலுங்கானாவில் ஆலங்கட்டி மழை – மக்கள் மகிழ்ச்சி
தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தெலுங்கானாவில்

தெலுங்கானாவில் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானாவில் வானிலையில் மாற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் மழை பெய்ததால், வானிலை திடீரென குளிர்ச்சியானது. இம்முறை மார்ச் மாத துவக்கத்திலேயே வெயிலின் உக்கிரம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வானிலை திடீரென குளிர்ச்சியாக மாறியது.

இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதிலாபாத், நிஜாமாபாத், வாரங்கல் மற்றும் ஹைதராபாத் வரை அனைத்து இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் இதே வானிலையே இருக்கும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

தெலுங்கானாவில்

தெலுங்கானாவில் உள்ள மக்கள் இன்னும் 3 நாட்களுக்கு உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் சாதாரண நேரங்களில், மதியம் 30 முதல் 33 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். ஆனால் இந்த மழையின் தாக்கத்தால் 20 டிகிரியாக குறைந்துள்ளது. வெயில் தாக்கத்தால் தத்தளித்த மக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியை அளித்துள்ளது என பொது மக்கள் தெரிவித்தனர்.

MUST READ