ஆதித்யா எல்- 1 விண்கலத்தை ஹேலோ சுற்றுப்பாதை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றிக்கரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பனை ஓலை பட்டையில் கறி விருந்து கொடுத்து நடைபெற்ற திருவிழா!
பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் லெக்ராஞ்சியன் புள்ளி இருக்கும் நிலையில், எல்- 1 புள்ளியை ஆதித்யா விண்கலம் செங்குத்தாக சுற்று வருவது போன்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மாற்றங்கள் காரணமாக, விண்கலத்தை ஹேலோ சுற்றுப்பாதை நோக்கிச் செலுத்துவதற்கான பணிகள், கடந்த அக்.06 – ஆம் தேதி நடந்ததாகவும், சுமார் 16 வினாடிகள் நீடித்த இந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் செயல்பாடுகள், நன்றாகவும், சரியானப் பாதையிலும் சென்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ள இஸ்ரோ, சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி, ஆதித்யா விண்கலம் திட்டமிட்டப்படி பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கோயில் இணை ஆணையரைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு!
ஆதித்யா எல்- 1 விண்கலம் தொடர்ந்து, முன்னோக்கி நகர்வதால், காந்த புலமையை அளவிடும் கருவிகள் சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கப்படும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 2- ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்- 1 விண்கலம், பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து விலகி, வெற்றிகரமாக லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.