Homeசெய்திகள்இந்தியா"இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் தான், இதயத்தைத் தொடும்"- ராகுல் காந்தி எம்.பி. அறிக்கை!

“இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் தான், இதயத்தைத் தொடும்”- ராகுல் காந்தி எம்.பி. அறிக்கை!

-

- Advertisement -
kadalkanni

 

"ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்"- ராகுல் காந்தி பேச்சு!
Photo: ANI

பாரத மாதா என்பது ஒவ்வொரு இந்தியனின் குரலாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியா என்பது ஒரு நிலப்பகுதி அல்ல; ஒரு சித்தாந்தம் அல்ல. ஒரு கலாச்சாரமோ (அல்லது) ஒரு மதமோ, சாதியோ சார்ந்தது அல்ல.

ஆனால் இந்தியா என்பது ஒவ்வொரு இந்தியனின் குரல் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடர்பான அனுபவங்களையும் ராகுல் காந்தி பகிர்ந்துக் கொண்டுள்ளார். இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் தான், இதயத்தைத் தொடும் என்ற பாரசீக கவிஞரின் வரிகளையும் ராகுல் காந்தி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர் சங்கர் தேசியக்கொடி ஏற்றினார்

நடைப்பயணத்தைத் தொடங்கும் போது, கால் வலி அதிகரித்ததாகவும், ஆனால் அதில் உடன் பயணித்தவர்களைப் பார்த்ததால் தனக்கு மேற்கொண்டு நடக்கும் ஆற்றல் கிடைத்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

MUST READ