Homeசெய்திகள்இந்தியாமழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

மழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

-

 

மழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள்!
File Photo

சுற்றுலாத் தளங்கள் அதிகமுள்ள இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை காரணமாக, நிலச்சரிவுகள் அதிகரித்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர் சங்கர் தேசியக்கொடி ஏற்றினார்

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வரும் இமாச்சலப்பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று மேகவெடிப்பு காரணமாக, பெரும் மழை பெய்தது. இதனால் சிம்லா உள்பட பல நகரங்கள் மீண்டும் வெள்ளக்காடாகின.

நேற்று (ஆகஸ்ட் 15) மீண்டும் மழை பெய்ததால், சிம்லாவின் கிருஷ்ணா நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆறு வீடுகள் அடியில் சிக்கிப் புதைந்தன. இதில் இருவருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சிம்லாவில் உள்ள பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, இதில் இருந்து 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 10- க்கும் மேற்பட்டோர் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்குள்ள சிவன் கோயில் இடிந்து விழுந்ததில் கோயிலில் வழிபட்டு கொண்டிருந்தவர்கள், இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டனர்.

இடிபாடுகளில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக, இமாச்சலின் முக்கிய சுற்றுலாத் தளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மலைகளில் இருந்து பாயும் தண்ணீரில் வீடுகள், மரக்கட்டைகள், வீட்டில் உள்ள பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டன.

நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நேரத்தில் அங்கு வெள்ளத்தில் சிக்கிய ஏராளமானோர் விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப்படை, ராணுவ வீரர்கள், காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

சாலைகள், ரயில் பாதைகள், மேம்பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்த நிலையில், பல இடங்களில் முழுமையாக மழை குறைந்த பிறகே சீரமைக்க முடியும் என்ற நிலையும் தொடர்கிறது.

MUST READ