இமாச்சலப் பிரதேசம் மாநிலம், சம்பா மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவுக்கோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!
பாங்கி கிராமத்தை மையமாகக் கொண்டு நேற்று (ஏப்ரல் 04) இரவு 09.34 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அதிர்வு உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய பல்வேறு குழுக்களை அம்மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்தது!
இதனிடையே, ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.