Homeசெய்திகள்இந்தியாஎச்.ஐ.வி. தொற்றுடன் கூடிய ரத்தம் ஏற்றப்பட்டதால் விபரீதம்!

எச்.ஐ.வி. தொற்றுடன் கூடிய ரத்தம் ஏற்றப்பட்டதால் விபரீதம்!

-

 

எச்.ஐ.வி. தொற்றுடன் கூடிய ரத்தம் ஏற்றப்பட்டதால் விபரீதம்!
File Photo

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முறையாகப் பரிசோதிக்கப்படாத ரத்தம் செலுத்தப்பட்ட 14 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு நடத்தும் லாலா லாஜ்பட் ராய் மருத்துவமனையில் தலஸ்சிமியா பாதிக்கப்பட்ட 180- க்கும் அதிகமான குழந்தைகள் ரத்த மாற்றுச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். கொடையாளர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தம் உரிய பரிசோதனைக்கு பிறகே நோயாளிகளுக்கு செலுத்தப்பட வேண்டும்.

ஆனால் பரிசோதனையில் நடந்த தவறில் எச்.ஐ.வி. நோய் தொற்றுடன் கூடிய ரத்தம் சிறுவர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது ஆறு முதல் 16 வயதிற்குட்பட்ட 14 சிறுவர்களில் எச்.ஐ.வி. நோய் தொற்று பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

ஹமாஸ் குழுவினரை அழிக்க சிறப்புப் படையை உருவாக்கிய இஸ்ரேல்!

எங்கு தவறு நிகழ்ந்தது என விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ