அடுத்தாண்டு சுதந்திர தினத்தின் போது, தங்கள் அரசின் செயல்பட்டு அறிக்கையை வெளியிடப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள நிலையில், மோடி அடுத்த ஆண்டில் இருந்து அவர் வீட்டில் தான் கொடியேற்ற வேண்டியிருக்கும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்தியா- சீனா பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண முடிவு!
அடுத்தாண்டு சுதந்திர தினத்தன்று டெல்லியில் உள்ள செங்கோட்டையில் யார் கொடியேற்றுவார் என தலைவர்கள் இப்போதே கணித்துக் கூறி வருகின்றனர்.
அடுத்தாண்டு இதே சுதந்திர தினத்தன்று தங்கள் அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை வெளியிடப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இதன் மூலம் மீண்டும் தானே பிரதமராவேன் என்பதை மறைமுகமாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி, இனி தனது வீட்டில் தான் தேசியக் கொடி ஏற்ற வேண்டியிருக்கும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து இனி தேசிய கொடியை ஏற்ற மாட்டார் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் நினைவுத் தினம்- குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை!
செங்கோட்டையில் இருந்து தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு, இந்தாண்டுடன் முடிந்து விட்டதாகவும், அடுத்தாண்டில் இருந்து எதிர்க்கட்சிகளின் கூட்டணியைச் சேர்ந்த ஒருவர் தான், அங்கு கொடியேற்றுவார் என்றும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசியுள்ளார்.